திருப்பதி,
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 15 அடி உயரத்துக்கு தடுப்பணைகள் கட்டியுள்ளது.
ஏற்கனவே பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு ஆங்காங்கே சிறு சிறு தடுப்பணைகள் கட்டியதால் வறண்டு போன பாலாற்றின் குறுக்கே தடுப்பு சுவர் உயர்த்தப்பட்டது. இந்த தடுப்பணைகள் சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பின. இதனால் சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தமிழகத்துக்கு பாலாற்றில் தண்ணீர் வருவது நின்றுவிட்டது. தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெலியகரம் ஏரி, பூண்டி ஏரி உள்ளிட்ட பகுதிகளுக்கு நீராதாரமாக விளங்கும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணியில் ஆந்திர அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
சித்தூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டுவதால் திருவள்ளூர் மாவட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து கேள்விக் குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆந்திரமாநிலம் சீதலகுப்பம் பகுதியில் 4 இடங்களில் தடுப்பணைகளை கட்டும் பணியை ஆந்திர அரசு தொடங்கியுள்ளது.
பருவ மழைக்கு முன்பாக அணைகளை கட்டி முடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அடியோடு நின்று விடும். திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயம் பாதிக்கும் சென்னை மாநகருக்கு குடிநீர் தேவை பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று காலை சீதலகுப்பத்தில் தமிழக விவசாயிகள் போராட்டம் செய்தனர். அங்கு ஆந்திர போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment