சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை சுருட்டி வீசிய இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.
லண்டன்,

மீண்டும் அஸ்வின்
8 அணிகள் இடையிலான 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, வங்காளதேசம் அரைஇறுதியை உறுதி செய்து விட்டன.
இந்த நிலையில் “ஜெயித்தால் உள்ளே; தோற்றால் வெளியே” என்ற நிலைமையில் ‘பி’ பிரிவில் நேற்று அரங்கேறிய மிக முக்கியமான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், ‘நம்பர் ஒன்’ அணியான தென்ஆப்பிரிக்காவும் லண்டன் ஓவலில் சந்தித்தன. இந்திய அணியில் உமேஷ் யாதவுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டார். தென்ஆப்பிரிக்க அணியில் வெய்ன் பார்னல் நீக்கப்பட்டு பெலக்வாயோ இடம்பிடித்தார்.
அம்லா 35 ரன்
‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் தென்ஆப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்தார். இதன்படி குயின்டான் டி காக்கும், ஹசிம் அம்லாவும் தென்ஆப்பிரிக்காவின் இன்னிங்சை தொடங்கினர். வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமாரும், பும்ராவும் ஆவேச தாக்குதல் தொடுத்தனர். இதை சமாளிக்க நிதானம் காட்டிய தென்ஆப்பிரிக்க ஜோடி முதல் 10 ஓவர்களில் 35 ரன்களே எடுத்தது.
இந்த கூட்டணிக்கு சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முடிவு கட்டினார். ஸ்கோர் 76 ரன்களை (17.3 ஓவர்) எட்டிய போது அம்லா 35 ரன்களில் (34 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து பாப் டு பிளிஸ்சிஸ் வந்தார்.
ஆடுகளத்தன்மை முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு உகந்த வகையிலேயே தென்பட்டது. சுழற்சியோ அல்லது ஸ்விங்கோ ஆகவில்லை. ஆனாலும் இந்திய வீரர்கள், நேர்த்தியான பந்து வீச்சு மற்றும் துடிப்பான பீல்டிங் மூலம் தென்ஆப்பிரிக்காவுக்கு இடைவிடாத நெருக்கடி கொடுத்தனர். டி காக் 53 ரன்களில் (72 பந்து, 4 பவுண்டரி) ஜடேஜாவின் சுழலில் கிளன் போல்டு ஆனார்.
திருப்பம் தந்த ரன்-அவுட்
இதன் பின்னர் அபாயகரமான பேட்ஸ்மேன் கேப்டன் டிவில்லியர்ஸ் ஆட வந்தார். அதிரடியை ஆரம்பிக்கும் முன்பே அவரை இந்திய வீரர்கள் பெவிலியனுக்கு அனுப்பி மிரட்டினர். ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு டிவில்லியர்ஸ் (16 ரன், 12 பந்து) ரன்-அவுட் ஆனார். இது தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. 4-வது விக்கெட்டுக்கு இறங்கிய டேவிட் மில்லருக்கும் இதே பரிதாபம் நிகழ்ந்தது.
பந்தை அடித்து விட்டு சில அடி தூரம் ஓடிய பிளிஸ்சிஸ் பிறகு வேண்டாம் என்று திரும்பினார். அதற்குள் எதிர்முனையில் நின்ற மில்லரும் இவர் பக்கத்திற்கு ஓடிவந்து விட்டார். இரு வீரர்களும் ஒரே முனையில் நிற்க மில்லர் (1 ரன்) ரன்-அவுட் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து ஆட்டம் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தென்ஆப்பிரிக்க வீரர்கள் அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அவசரகதியில் ஷாட்டுகளை அடித்து விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்தனர். பதற்றமான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க வீரர்கள் சொதப்பி விடுவார்கள் என்ற கூற்று மீண்டும் ஒரு முறை ஊர்ஜிதமானது.
தென்ஆப்பிரிக்கா 191 ரன்
44.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென்ஆப்பிரிக்க அணி 191 ரன்களில் சுருண்டது. ஒரு கட்டத்தில் 140 ரன்னுக்கு 2 விக்கெட் (28.1 ஓவர்) என்று வலுவான நிலையில் இருந்த தென்ஆப்பிரிக்கா அடுத்த 51 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை தாரைவார்த்தது கவனிக்கத்தக்க அம்சமாகும். இந்திய தரப்பில் புவனேஷ்வர்குமார், பும்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 192 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களம் புகுந்தனர். ரபடாவின் ஓவரில் பவுண்டரி, சிக்சர் விரட்டிய ரோகித் சர்மா 12 ரன்களில் கேட்ச் ஆனார்.
இந்தியா வெற்றி
அதைத் தொடர்ந்து தவானும், கேப்டன் விராட் கோலியும் கைகோர்த்து இந்தியாவின் வெற்றிப்பாதையை சுலபமாக்கினார்கள். சூப்பர் பார்மில் உள்ள தவான் தனது பங்குக்கு 78 ரன்கள் (83 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து அவுட் ஆனார். அதன் பிறகு யுவராஜ்சிங் ஆட வந்தார். மறுமுனையில் 21 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த விராட் கோலி அரைசதத்தை கடந்தார். இறுதியில் யுவராஜ்சிங் சிக்சர் அடித்து ஆட்டத்தை தித்திப்போடு முடித்து வைத்தார்.
இந்திய அணி 38 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 76 ரன்களுடனும் (101 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), யுவராஜ்சிங் 23 ரன்களுடனும் (25 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் ‘பி’ பிரிவில் இந்தியா முதலிடத்தை பிடித்து அரைஇறுதியை எட்டியது. தென்ஆப்பிரிக்கா வெளியேற்றப்பட்டது.
ஸ்கோர் போர்டு
தென்ஆப்பிரிக்கா
டி காக் (பி) ஜடேஜா 53
அம்லா (சி) டோனி (பி)
அஸ்வின் 35
பிளிஸ்சிஸ் (பி) பாண்ட்யா 36
டிவில்லியர்ஸ் (ரன்-அவுட்) 16
மில்லர் (ரன்-அவுட்) 1
டுமினி (நாட்-அவுட்) 20
கிறிஸ் மோரிஸ் (சி)
புவனேஷ்வர் (பி) பும்ரா 4
பெலக்வாயோ எல்.பி.டபிள்யூ
(பி) பும்ரா 4
ரபடா (சி) டோனி (பி)
புவனேஷ்வர் 5
மோர்னே மோர்கல் (சி)
கோலி (பி) புவனேஷ்வர் 0
இம்ரான் தாஹிர் (ரன்-அவுட்) 1
எக்ஸ்டிரா 16
மொத்தம் (44.3 ஓவர்களில்
ஆல்-அவுட்) 191
விக்கெட் வீழ்ச்சி: 1-76, 2-116, 3-140, 4-142, 5-157, 6-167, 7-178, 8-184, 9-184
பந்து வீச்சு விவரம்
புவனேஷ்வர்குமார் 7.3-0-23-2
பும்ரா 8-0-28-2
அஸ்வின் 9-0-43-1
ஹர்திக் பாண்ட்யா 10-0-52-1
ஜடேஜா 10-0-39-1
இந்தியா
ரோகித் சர்மா (சி) டி காக்
(பி) மோர்கல் 12
தவான் (சி) பிளிஸ்சிஸ்
(பி) தாஹிர் 78
விராட் கோலி (நாட்-அவுட்) 76
யுவராஜ்சிங் (நாட்-அவுட்) 23
எக்ஸ்டிரா 4
மொத்தம் (38 ஓவர்களில்
2 விக்கெட்டுக்கு) 193
விக்கெட் வீழ்ச்சி: 1-23, 2-151
பந்து வீச்சு விவரம்
ரபடா 9-2-34-0
மோர்னே மோர்கல் 7-1-38-1
பெலக்வாயோ 5-0-25-0
கிறிஸ் மோரிஸ் 8-0-40-0
இம்ரான்தாஹிர் 6-0-37-1
டுமினி 3-0-17-0

No comments:
Post a Comment