லண்டன்,
பிரின்ஸ் பிலிப் (வயது 96) ராணி இரண்டாம் எலிசபெத்துக்கும் 1947–ம் ஆண்டு, நவம்பர் 30–ந் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு இளவரசர் சார்லஸ், இளவரசி ஆன், இளவரசர் ஆன்ட்ரூ, இளவரசர் எட்வர்ட் என 4 பிள்ளைகள் உள்ளனர்.
இருவரும் வரும் நவம்பர் மாதம் 30–ந் தேதி தங்களது 70–வது மண நாளை கொண்டாட உள்ள நிலையில் எலிசபெத்தின் கணவர் பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நலமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment