'டங்கல்' படத்தில் நடித்த ஸைரா வாசிமின் கார் விபத்துக்குள்ளாகி, காஷ்மீரில் உள்ள தால் ஏரியில் விழுந்துள்ளது.
கடந்த ஆண்டு, இந்திய மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத்தின் வாழ்க்கையை தழுவி 'டங்கல்' திரைப்படம் வெளியானது. அமிர்கான் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் இந்தியா, சீனா என உலக அளவில் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில் அமிர்கானின் மகளாக (சிறுவயது) நடித்திருந்தார் ஸைரா வாசிம். இவரின் துனிச்சலான நடிப்புக்கு பல்வேறு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment